"நாட்டு மக்களை ராஜபக்ச அரசால் தொடர்ந்தும் ஏமாற்ற முடியாது." - ஜே.வி.பி. எச்சரிக்கை

#Sri Lanka President #people
Prasu
2 years ago
"நாட்டு மக்களை ராஜபக்ச அரசால் தொடர்ந்தும் ஏமாற்ற முடியாது." - ஜே.வி.பி. எச்சரிக்கை

"நாட்டு மக்களை ராஜபக்ச அரசால் தொடர்ந்தும் ஏமாற்ற முடியாது."

- இவ்வாறு ஜே.வி.பி.யின் சிரேஷ்ட உறுப்பினர் கே.டி.லால்காந்த தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

"உலகப் பொருளாதாரத்தின் தாக்கங்களால் இலங்கையில் நெருக்கடி நிலை உருவாகியுள்ளது என்ற அரசின் வாதம் பொய்யானது.

தற்போதைய நிலைமைகளில் அநேகமான நாடுகளின் பொருளாதாரம் ஸ்திரமடைந்துள்ளது.உக்ரைன் – ரஷ்ய போர் காரணமாக நாட்டில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது என அரசு காரணம் கூறக்கூடிய சாத்தியம் உண்டு.

கொரோனாப் பெருந்தொற்று, வறட்சி போன்ற காரணிகளால் நாட்டில் நெருக்கடி நிலை ஏற்பட்டது எனக் கூறி அரசு மக்களைப் பிழையாக வழிநடத்த முயற்சிக்கின்றது.ஜனாதிபதியோ, நிதி அமைச்சரோ மக்களைத் தொடர்ந்தும் பிழையாக வழிநடத்த முடியாது.

தற்போதைய அரசை வீட்டுக்கு அனுப்பிவைக்க மக்கள் அனைவரும் அணிதிரள வேண்டும்" - என்றார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!